வாரிசு படம் குறித்து ரிவ்யூ கொடுத்த லோகேஷ் கனகராஜின் பேட்டி வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் குறித்த ரிவ்யூகள் தற்போது இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

விரைவில் வெளியாகும் தளபதி 67 அப்டேட்!!… லோகேஷ் கனகராஜின் பேட்டியால் ரசிகர்கள் உற்சாகம்.!

அந்த வகையில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் வாரிசு படம் குறித்து அளித்திருக்கும் பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், வாரிசு திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இப்படம் எனக்கு மிகவும் புத்துணர்ச்சியை தந்துள்ளது. தளபதி 67 படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.