கூலி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு அனிருத் திசையமைத்து வருகிறார் மேலும் ஸ்ருதிஹாசன் ,உபேந்திரா, சத்யராஜ் ,மகேந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் படக்குழு நேற்று அப்டேட் ஒன்றை வெளியிட்டது.
அதில் இன்று மாலை இந்த படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை அறிவிக்கப் போவதாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சௌபின் ஷாஹிர் கூலி படத்தில் இணைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.