lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் நடித்த படத்தில் நடந்த மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lokesh Kanagaraj Upcoming Movies Update : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் தற்போது தளபதி விஜய், விஜய்சேதுபதி ஆகியோரை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் ஊரடங்கு முழுமையாக முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி அடுத்ததாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உலக நாயகன் கமலை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்திற்கு அடுத்ததாக அவர் மீண்டும் கமல்ஹாசனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது அடுத்தடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் இரண்டு படங்களை இயக்கி உள்ளார். முதல் படத்தில் ஹீரோ கமல் எனவும் இரண்டாம் படத்தின் ஹீரோ ரஜினிகாந்த் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.