Lokesh Kanagaraj to direct Thalapathy 64 | Vijay has told the film because he had a story | Vijay | Kollywood | Thalapathy Vijay | Tamil Cinema

Lokesh Kanagaraj to direct Thalapathy 64 :

தளபதி 64 படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கபோவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

தர்பாரில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகர் வெளிப்படையாக சொன்ன தகவல்!

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த படத்தை யார் இயக்குவார் என மிகப்பெரிய கேள்வி நிலவிவரும் நிலையில் இப்படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கபோவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இவர் மாநகரம் படத்தை இயக்கிவிட்டு தற்போது கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கி வருகிறார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் இவர் விஜய்யை சந்தித்து கதை கூறியுள்ளார். மேலும் விஜய்க்கும் கதை பிடித்துவிட்டதால் படத்துக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.