Lokesh Kanagaraj on Kamal 232 Movie Details
Lokesh Kanagaraj on Kamal 232 Movie Details

லோகேஷ் கனகராஜின் அடுத்த பட டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.

Lokesh Kanagaraj on Kamal 232 Movie Details : தமிழ் சினிமாவில் மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம்பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போய் வருகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக நேற்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் நடந்த அதிரடி மாற்றங்கள் – வெளியானது ஹாட் அப்டேட்.!!

இந்த அறிவிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் 232-வது திரைப்படம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு எவனென்று நினைத்தாய் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் சம்மர் 2021ல் வெளியாகும் எனவும் அனிருத் இசையமைக்க உள்ளார் எனவும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்பு லோகேஷ் கனகராஜ் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.