Lokesh Kanagaraj Next Movie Update
Lokesh Kanagaraj Next Movie Update

லோகேஷ் கனகராஜ் இன் அடுத்த படம் குறித்த அப்டேட் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Lokesh Kanagaraj Next Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ரஜினி நடிக்க வேண்டிய படத்தில் சிம்பு? இயக்குனர் யார் தெரியுமா? – இணையத்தில் வெளியான பரபரப்பு தகவல்கள்

ஆனால் இப்படம் கமர்சியலுக்கு அப்பாற்பட்ட படமாக இருப்பதால் ரஜினி இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இக்கூட்டணி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது லோகேஷ் கனகராஜ் படத்திற்கான வேலைகளில் இறங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வெகு விரைவில் லோகேஷ், கமல், ரஜினி கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.