Lokesh Kanagaraj Next Movie Hero
Lokesh Kanagaraj Next Movie Hero

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Lokesh Kanagaraj Next Movie Hero : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலமாக வெற்றி இயக்குனராக தடம் பதித்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது தளபதி விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

விஜயின் அடுத்த படம்.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட் கொடுத்த முக்கிய பிரபலம் – கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்.!

இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் லோகேஷ் சொன்ன கதை கமர்ஷியலாக இல்லாததால் ரஜினி இதற்கு நோ சொன்னதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் உங்களின் படத்தில் நானே நடிக்கிறேன் என கூறி லோகேஷ் கனகராஜ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.