Lokesh Kanagaraj Next Movie Hero
Lokesh Kanagaraj Next Movie Hero

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் மற்றும் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Lokesh Kanagaraj Next Movie Hero : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.

இந்த இரண்டு படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இவர் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசனை இயக்கலாம் என கூறப்பட்டு வந்தது. அதே சமயம் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க போகிறார் எனவும் தகவல் வெளியானது.

பிரைன் ஸ்ட்ரோக்கால் அவதிப்பட்ட வந்த நடிகர் லோகேஷ்ன் லாக்டோன் தற்போதைய நிலை!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஹீரோவாக நடிப்பார்கள் என கூறப்பட்டு வந்தது. ரசிகர்களும் இதற்கான அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இப்படியான நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.