Lokesh kanagaraj
விஜயை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் யாரை இயக்குவார் என்ற தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

மாநகரம் படத்தின் மூலமாக இயக்குநராகி மக்கள் மனதை கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்திற்கு பிறகு கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி அதிலும் மாபெரும் வெற்றியை சுவைத்து விட்டார்.

மேலும் லோகேஷ் தற்போது தளபதி விஜயை வைத்து விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார். குறுகிய காலகட்டத்தில் சிறிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது.

சம்மர் 2020 ரிலீஸ் என கூறப்பட்டு வரும் இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் சூரியாவை இயக்கலாம் என கூறப்படுகிறது. அப்படியில்லை என்றால் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்குவார் என கூறுகின்றனர்.

மேலும் பத்திரிகையாளர் ஒருவர் லோகேஷ் கமல்ஹாசனை வைத்து படம் ஒன்றை இயக்க ராஜ்கமல் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் யாருடன் லோகேஷ் கூட்டணி அமைத்தால் நன்றாக இருக்கும்னு நீங்க சொல்லுங்க ரசிகர்களே.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.