Thalapathy 64
தளபதி 64 படத்திற்காக விஜய் டெல்லிக்கு பறந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

ஏற்கனவே முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது விஐய் டெல்லி பறந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன. விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரித்து வரும் இந்த படத்திற்க்கு அனிருத் இசையமைக்கிறார்.நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மேலும் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, ஆஹா கல்யாணம் பவி டீச்சர், 96 பட பிரபலம் கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay Thalapathy Vijay

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.