Lokesh Kanagaraj Movie With Prabhas

லோகேஷ் கனகராஜின் அடுத்த ஹீரோ விஜய் என கூறப்பட்டு வந்த நிலையில் ஏதோ ஒரு பிரம்மாண்ட நடிகருடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Lokesh Kanagaraj Movie With Prabhas : தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான படம் என்றாலும் கைதி திரைப்படம் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

விஜய்யும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக கூட்டணி சேர்ந்து நடித்திருந்த இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வாட்ஸ் அப்பில் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் நிலைத்து விக்ரம் என்ற பெயரில் உருவாகும் படத்தை இயக்க உள்ளார்.

அதைப் பின்னர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய்யுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது படம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுத்து வருகின்றனர்.