ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை அழைத்து சந்தித்து பேசியுள்ளார். இதனால் பல விதமான தகவல்கள் பார்வை தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் தற்போது தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை சந்தித்து பேசியுள்ளார். இதனால் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போவது லோகேஷ் தானோ? என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
உண்மை என்னவெனில் கைதி படத்தை பார்த்த ரஜினி லோகேஷை பாராட்டவே அவரை அழைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.