Lokesh Kanagaraj Latest Announcement
Lokesh Kanagaraj Latest Announcement

மாஸ்டர் பட நடிகர் திடீரென தன்னைப் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Lokesh Kanagaraj Latest Announcement : தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால் பட ரிலீஸ் தள்ளி போய்க் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ரஜினி, கமல், அஜித், விஜய்க்கு பிரபல நடிகை வைத்த கோரிக்கை – இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தவில்லை. டுவிட்டரில் மட்டுமே உள்ளேன். மற்ற அனைத்தும் போலி அவைகளை பின் தொடர வேண்டாம் என கூறியுள்ளார்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் லோகேஷ் கனகராஜ் பெயரில் மாஸ்டர் குறித்த பொய்யான தகவல்கள் வெளியானதால் அவர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.