சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்க உள்ளார். சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யா விலகியதால் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு லோகேஷ் கனகராஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் சம்மதித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மட்டும் இல்லாமல் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.