அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய லோகேஷ் கனகராஜ் வைரலாகும் ஃபேவரிட் லிஸ்ட் இதோ.

கோலிவுட் திரை உலகில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். அவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைப்பில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் தனது ஃபேவரிட் பட்டியலை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், நான் ரஜினி மற்றும் அஜித் சாருடன் பணியாற்ற விரும்புகிறேன், மியூசிக்கில் சிறுவயதில் இருந்து ஏ ஆர் ரகுமானை மிகவும் பிடிக்கும் அதனால் கண்டிப்பாக அவருடன் ஒருமுறையாவது பணியாற்ற விரும்புகிறேன். அதன் பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராமை மிகவும் பிடிக்கும் அதனால் அவருடனும் பணியாற்ற ஆசைப்படுகிறேன் என்று அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த அஜித் ரசிகர்கள் விரைவில் இருவரும் இணைந்து படம் பண்ணுவார்கள் என்ற ஆர்வத்துடன் வைரலாக்கி வருகின்றன.

https://twitter.com/pcsreeram/status/1649336587237621760