கொரானா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த லோகேஷ் கனகராஜ் வாக்குசாவடி சென்று ஓட்டளித்துள்ளார்.

Lokesh Kanagaraj Cast His Vote : தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

கொரானாவில் இருந்து மீண்டு வந்த லோகேஷ்.. ஓட்டளித்த பிறகு அவர் வெளியிட்ட புகைப்படம்.!!

காலையிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் மற்றும் பல பிரபலங்கள் ஓட்டளித்தனர். தளபதி விஜய் சைக்கிளிலில் வருகை தந்து ஓட்டளித்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொரானா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பூரண குணம் அடைந்துள்ளார். அவர் ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியும் உள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரானாவில் இருந்து மீண்டு வந்த லோகேஷ்.. ஓட்டளித்த பிறகு அவர் வெளியிட்ட புகைப்படம்.!!