Lokesh Kanagaraj About Vijay
Lokesh Kanagaraj About Vijay

பாட்டு டான்ஸ் என எதுவுமே வேண்டாம் விஜய் மட்டும் போதும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj About Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். சினிமா பின்புலத்துடன் அறிமுகமானாலும் முழுக்க முழுக்க தன் உழைப்பால் முன்னேறி இருப்பவர்.

இதற்காக அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து பின் அதை தொடர்ந்து இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை பிரிட்டோ தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆசை படத்திற்கு முன்னரே நடிக்க இருந்த அஜித்.. இயக்குனர் இறந்தால் கைவிடப்பட்ட படம் – வெளிவராத ரகசியத்தைக் கூறிய இளம் வயது நண்பர்!

இந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒரு படத்தை இயக்க பாட்டு, டான்ஸ் எதுவுமே வேண்டாம் விஜய் மட்டும் போதும். அந்த அளவுக்கு ஸ்ட்ராங்கான பர்பார்மர் என கூறியுள்ளார்.

ஏப்ரல் 9ம் தேதியே வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி போய் உள்ளது. தற்போது தான் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இப்படத்தின் டிரைலரும் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்ட பின்னரே வெளியாகும் என கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே வார்த்தையில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திய ரஜினி – அவர் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு.!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தமன் இசை அமைக்க உள்ளார்.

இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில் நிச்சயம் அது இல்லை என தெரிய வந்துள்ளது.

புத்தம் புதிய ஸ்கிரிப்ட் உடன் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.