தளபதி 67 படம் குறித்த மாஸான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்க உள்ள தளபதி 67 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறித்த விவரங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் இது முழுக்க முழுக்க 100% என்னுடைய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் கௌதம் மேனன் அவர்கள் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதை லோகேஷ் கனகராஜ் உடன் சேர்ந்து அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.