தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும் என்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ள லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj About Thalapathy 67 Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

மாஸா? கிளாஸா? தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும்? மஜாவான பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். தளபதி 67 படம் பற்றி கேட்டதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் அதனை படக்குழுவே அறிவிப்பார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் மாஸாக இருக்குமா அல்லது கிளாஸ் ஆக இருக்குமா என கேட்டதற்கு இரண்டுமே இருக்கும் என தெரிவித்து இருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட நடிகர்களை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸா? கிளாஸா? தளபதி 67 திரைப்படம் எப்படி இருக்கும்? மஜாவான பதில் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!