Lokesh Kanagaraj About Soorarai Potru Trailer

சூர்யாவின் சூரரைப்போற்று படம் பற்றிய லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj About Soorarai Potru Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரைப் போற்று.

இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் கடந்த திங்கட்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. பார்வையாளர்களின் எண்ணிக்கையில் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

படத்தின் டிரைலர் குறித்து இயக்குனர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

சூரரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் மிகவும் அருமையாக இருப்பதாகவும் மாறாவின் அனுபவத்தை பார்க்க நவம்பர் 12ம் தேதிக்கு ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 12ஆம் தேதி சூரரைப்போற்று படம் அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/Vishalorton1/status/1320962865688317952?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.