Lokesh Kanagaraj About Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். லோகேஷ் உடன் இணைந்து மேயாத மான், ஆடை ஆகிய படங்களின் இயக்குனரான ரத்னகுமார் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், மகேந்திரன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ரம்யா, தீனா, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு சிறப்பாக வந்திருப்பதாக விஜய்சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் கூறியிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினர்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுவரை நான் மாஸ்டர் படத்தை 10 தடவைக்கு மேல் பார்த்துட்டேன். செம்ம மாஸாக வந்துள்ளது. விஜய் ரசிகர்களை தாண்டி அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் படமாக மாஸ்டர் இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் வெறித்தனமாக கூடியுள்ளது. ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் மாஸ்டர் ட்ரெய்லருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதிக்காகவும் தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய், முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.