Lokesh Kanagaraj About Master Teaser

மாஸ்டர் டீசரில் ஆண்ட்ரியா, மஹேந்திரன் இடம்பெறாததற்கான காரணம் என்ன என லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

Lokesh Kanagaraj About Master Teaser : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் ஆண்ட்ரியா மகேந்திரன் ஆகியோர் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் விஜயின் பஞ்ச் டயலாக்குகளும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கேட்டபோது விஜய் சார் இந்த படத்தில் பஞ்ச் டயலாக் பேசவில்லை. ஆண்ட்ரியா மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். மகேந்திரன், பூவையார் என பலரை டீசரில் காட்டவில்லை. வேறு எதுவும் காரணமில்லை என தெரிவித்துள்ளார்.