Lokesh Kanagaraj About Master Movie

மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Lokesh Kanagaraj About Master Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், ஸ்ரீநாத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 13ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப்படத்தில் இன்னொரு சப்ரைஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இந்தத் திரைப்படத்தை அவரும் நடிகராக அறிமுகமாகி உள்ளார். இது ரசிகர்களுக்கு இன்னும் ஒரு சர்ப்ரைஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் எந்த ஒரு குறியீடும் இருக்காது, விஜய்கென பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்காது அதற்கான காரணங்கள் என்ன என்பது படம் பார்த்த பிறகு உங்களுக்கே புரிந்துவிடும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை 50 சதவீத படம் விஜய் படமாகவும் 50 சதவீத படம் என்னுடைய படமாக இயக்கி உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.