Lokesh Kanagaraj About Corona Kumari Movie

கதை கேட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல என இயக்குனர் கோகுலின் புதிய படம் பற்றி பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj About Corona Kumari Movie : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கோகுல்.

இவர் ரௌத்திரம், காஷ்மோரா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கியவர் கோகுல், இதில் விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

இந்த படங்களில் இடம்பெற்றிருந்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் கொரானா குமாரு.

இந்த படம் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது கொரானா குமாரு படத்தின் கதையை கேட்டு தன்னால் சிரிப்பு அடக்க முடியவில்லை, இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.