
தளபதி 67 படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
Lokesh Decision on Thalapathy 67 Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மன்சூர் அலிகான் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வரும் அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை வெளியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.