Lockdown Short Film Poster
Lockdown Short Film Poster

விஜய் ரசிகரின் இயக்கத்தின் பாண்டியன் ஸ்டோர் கதிர் நடித்துள்ள குறும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Lockdown Short Film Poster : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலமாக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் குமரன். இந்த சீரியலில் இவர் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது தளபதி விஜய் ரசிகரான பில்லா என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள லாக் டவுன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த குறும்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் ரசிகர் இயக்கும் குறும்படத்தின் போஸ்டர் என்பதால் விஜய் ரசிகர்களும் இதனை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

செம ஸ்லிம்.. லாக் டவுனில் அடையாளம் தெரியாமல் மாறிய அஞ்சலி – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!!

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத குமரன் விஜய் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த குறும்படத்தில் குமரனுக்கு ஜோடியாக சுனிதா என்பவர் நடித்துள்ளார். மேலும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

பிரவீன் குமார் மற்றும் ராமிஸ் நவீத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஜான் பிரவீன் இசை அமைக்க பாலாஜி எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சுதீஷ் என்பவர் ஸ்டன்ட் பணிகளை மேற்கொள்ள ஜி கே ஜெகன் கலை இயக்குனராகவும் அபு என்பவர் அசோசியேட் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

இரண்டு நிறுவனங்கள் VFX பணிகளை கவனித்து உள்ளது. தற்போது வரை 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.