LKG Review

LKG Review : கே.ஆர் பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் கதை, திரைக்கதை வசனம் எழுதி அவரே நாயகனாக நடித்துள்ள திரைப்படம் LKG.

மேலும் இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், மயில் சாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

கதைக்களம் : 

ஒரு சாதாரண வார்டு கவுன்சிலரான ஆர்.ஜே. பாலாஜி எப்படியாவது சி.எம் ஆக வேண்டும் என ஆசைப்பட்டு பல தில்லாங்கடி வேலைகளை செய்கிறார். அப்படி என்னவெல்லாம் செய்கிறார்? இறுதியில் முதல்வாகிறாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் காமெடி கலந்த கதைக்களம்.

ஆர்.ஜே.பாலாஜி :

கதை, திரைகதை, வசனம் என அனைத்திலும் காலக்கியுள்ளனர் ஆர்.ஜே.பாலாஜியும் அவரது டீமும். ஆர்.ஜே பாலாஜியும் தன்னுடைய ஸ்டைலையில் அனைத்து கட்சியையும் கலாய்த்தெடுத்துள்ளார்.

அவருடைய நையாண்டி கலந்த நடிப்பு ரசிகர்களுக்கு 100% சிரிப்புக்கு கேரண்டி வழங்குகிறது.

ப்ரியா ஆனந்த் :

இதுவரை ப்ரியா ஆனந்த் நடித்த படங்களிலேயே சிறந்த கதாபத்திரத்தை கொண்டு நடித்த படம் என்றால் அது LKG தான். படம் முழுவதும் வலம் வரும் ஒரு ரோலில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாஞ்சில் சம்பத் :

30 வருட அரசியல் வாதியான நாஞ்சில் சம்பத் இந்த படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல நடிகர் கூட என்பதை நிரூபித்துள்ளார்.

மயில் சாமி :

மயில் சாமி படம் முழுவதும் ஆர்.ஜே பாலாஜியுடன் இருக்கும் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். அவரும் படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக நடித்து கொடுத்துள்ளார்.

ஜே.கே. ரித்தீஷ் :

ஜே.கே ரித்தீஷ் ஆர்.ஜே. பாலாஜியை எதிர்க்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் காமெடி கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தொழில்நுட்பம்

இசை :

லியோன் ஜேம்ஸ் என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இசையும் படமும் ஒன்றி போகும் அளவிற்கு திறம்பட இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு :

வித்து அய்யனா என்பவர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எடிட்டிங் பணிகளை அந்தோனி கவனித்துள்ளார். இருவருமே அவரது பணிகளை திறம்பட செய்துள்ளனர்.

ஸ்டண்ட் :

ஸ்டண்ட் சில்வா இப்படத்திற்கு ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார். படத்தில் சண்டை காட்சிகள் குறைவு என்றாலும் அதனை சிறப்பாக கவனித்துள்ளார்.

இயக்கம் :

கே.ஆர் பிரபு இப்படத்தினை சிறப்பான கோர்வையாக கொடுத்துள்ளார். முதல் பாதியில் கொஞ்சம் மெதுவாக செல்வது போல் இருந்தாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களை கட்டி போட்டு விட்டார்.

தம்ப்ஸ் அப் :

1. காமெடி கலந்த கதை
2. சிந்திக்க வைக்கும் கிளைமாக்ஸ்
3. ஒருவரிடம் அரசியல் சார்பாக பத்திரிகை ஒன்று கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போது எடையில் மற்றொருவர் தல தான் கெத்து என்பதெல்லாம் தியேட்டரையே சிரிக்க வைத்து விடுகிறது.

தம்ப்ஸ் டவுன் :

1. அரசியலிலும், பேச்சாற்றலிலும் திறமை வாய்ந்தவர் என பெயரெடுத்த நாஞ்சில் சம்பத் அவர்களின் கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் வலு சேர்த்திருக்கலாம்.

YouTube video

YouTube video

REVIEW OVERVIEW
LKG விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
lkg-reviewமொத்தத்தில் LKG இந்த காலத்து அரசியலை மரண கலாய்க்கும் படமாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் கிளைமேக்ஸால் மக்கள் மனதை கொள்ளையடிப்பது உறுதி.