Liver Transplant Operation for 42 Days Baby in Chennai | Aryan Sayani, a boy from Mumbai, has just 42 days to give birth. The child has a liver disorder
பிறந்து 42 நாளே குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரர் மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.

Liver Transplant Operation : மும்பையை சேர்ந்த ஆர்யன் சயானி என்ற ஆண் குழந்தை பிறந்து 42 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளன. இந்த குழந்தையில் கல்லீரலில் ஏற்பட்ட கோளாறால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட காரணங்கள் என்ன? அறிகுறிகள் என்ன? தெரிந்து கொள்வோமா!.

இதனால் சென்னையில் உள்ள டாக்டர் ரீலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சீனியர் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் மொஹம்மத் ரீலா என்பவர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார்.

அதீ நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் மருத்துவர்கள் இந்த கல்லீரல் மாற்று சிகிச்சையை 10 மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

42 வயது குழந்தைக்கு இப்படியொரு அறுவை சிகிச்சையை செய்திருப்பது மிக பெரிய விசியம். மருத்துவர்களின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து டாக்டர் ரேலா மருத்துவமனையின் ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் இளங்குமரன் கூறியது என்னவென்றால் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைந்த குழந்தைகளுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது என்பது சவாலான ஒன்று.

சிசேரியன் ஆன பெண்கள், உட்கொள்ள வேண்டிய உணவுகள்: தெரிந்து கொள்வோமா!

அதீ நவீன தொழில்நுட்பத்துடன் இந்த முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம். எங்கள் மருத்துவமனையில் திறமை வாய்ந்த மருத்துவ நிபுணர்களும் அதீ நவீன தொழில்நுட்ப கருவிகளும் இருப்பதால் சிறிய குழந்தைகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக நாங்கள் வளர்ந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here