Liver Safety
Liver Safety

Liver Safety : கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும்.  உணவுகெடாமல் இருக்க ரசாயணங்கள் தான் நொறுக்குத்தீனிகளில் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது.

இதனால்தான், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகள் பலருக்கு கல்லீரல், சிறுநீரக கோளாறுகள் அதிகம் காணப்படுகிறது.

நமது உயிரை பாதுகாக்கும் முக்கிய உறுப்பான கல்லீரலை கடுமையாக பதம் பார்ப்பது நொறுக்குத் தீனிகள்தான்.

▪ பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப்பொருள் கெடாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

இவை கல்லீரலை மிகவும் பாதிப்படைய செய்கின்றன. நொறுக்குத் தீனிகளால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன.

▪ நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்தம் செய்கின்றன. எஞ்சியவற்றை சிறுநீரகம் சுத்தம் செய்கின்றன.

நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.

▪ கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்கப்படுகின்றன. இதில் சப்பாத்தி கெடாமல் இருக்க ஒருவகை ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன.

இது போன்ற அரை வேக்காட்டு ரெடிமேடு சப்பாத்திகளை வாங்கி நாம் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும். அஜீரணக் கோளாறு, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.

▪ தடுக்கும் வழிகள்:

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது.

உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம்.

▪ குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here