Lingusamy Meet With Vasantha Balan

கொரானா தீவிர சிகிச்சை பிரிவில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்த பாலனனை சந்தித்துள்ளார் இயக்குனர் ஒருவர்.

Lingusamy Meet With Vasantha Balan : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வசந்தபாலன். தொடர்ந்து தனித்துவமான திரைப்படங்களை இயக்கி வரும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது இவர் கொரானா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரானா என்றாலே அவர்களை அணுக அனைவருமே அஞ்சுவார்கள்.

ஆனால் எந்தவித அச்சமும் தயக்கமும் இல்லாமல் சிகிச்சை பெற்றுவரும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்று இயக்குனர் வசந்தபாலன் சந்தித்துள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

இருவரும் மிக மிக நெருங்கிய நண்பர்கள் என்பதால் பயத்தையும் தாண்டி தன்னுடைய நண்பனுக்காக நேரில் சந்தித்து அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் லிங்குசாமி. இவருடைய இந்தச் செயல் அனைவரையும் பாராட்ட வைத்து வருகிறது.