கவின், அமிர்தா ஐயர் நடிப்பில் வெளியாகியுள்ள லிப்ட் திரைப்படம் எப்படி இருக்கு என பார்க்கலாம் வாங்க.

Lift Movie Review : தமிழ் சினிமாவில் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் பிக் பாஸ் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் லிப்ட்.

படத்தின் கதைக்களம் :

ஒரு ஐடி கம்பெனியில் பெங்களூரிலிருந்து ட்ரான்ஸ்பர் செய்யப்படுகிறார் கவின். இந்த கம்பெனிக்கு வந்த கவின் இதே கம்பெனியில் அமிர்தா ஐயர் HR ஆக வேலை செய்வதை பார்த்து அதிர்ச்சியாகிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒரு முறை சந்தித்துள்ளனர்.

இன்றைய ராசி பலன்.! (1.10.2021 : வெள்ளிக் கிழமை)

திகிலூட்டும் திரைக்கதை.‌.. கவினின் லிப்ட் எப்படி இருக்கு?? - விமர்சனம் இதோ.!!

இந்த நிலையில் கவின் முதல் நான் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பும் போது அவருடைய உயரதிகாரி ஒரு பைலை கொடுத்து முடித்து கொடுக்குமாறு கேட்கிறார். இதனால் 10:30 வரை கவின் ஆபீஸில் வேலை செய்கிறார். ஆபீஸில் இருக்கும்போது அவர் சில அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார். இந்த வேலையை முடித்துவிட்டு லிஃப்டில் கீழே இறங்கி தன்னுடைய காரில் வெளியே செல்ல முயல்கிறார். ஆனால் சுற்றிச் சுற்றி கார் உள்ளே தான் இருக்கிறதே தவிர அவரால் வெளியே செல்ல முடியவில்லை.

மேலும் தான் மொபைல் போனில் வேலையை மறந்து விட்டு வந்ததால் மீண்டும் தனது ஆபிஸ்க்கு செல்கிறார். அதன் பின்னர் இவர் லிப்டில் சிக்கிக் கொண்ட நிலையில் பல அமானுஷ்ய சம்பவங்களை சந்திக்கிறார். அதன் பின்னர் அமெரிக்காவும் மேலே சுற்றிக் கொண்டிருக்க இருவரும் சேர்ந்து வெளியே தப்பிக்க முயலுகின்றனர். ஆனால் இவர்களால் வெளியை தப்பிக்க முடியவில்லை. கடைசியில் என்னவானது? எப்படி தப்பித்தார்கள்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

Trailer-ல இருக்குற அளவுக்கு ஒன்னுமே இல்ல – Rudra Thandavam Public Review

படத்தை பற்றிய அலசல் :

கவின் மற்றும் உள்ளதா என இருவர் மட்டுமே இந்த படம் முழுவதும் பயணம் செய்கின்றனர். ஆரம்பத்தில் கொஞ்சம் கலகலப்பாக தொடங்கிய திரைப்படம் அதன் பின்னர் திகிலூட்டும் வகையில் இருக்கிறது.

கவின், அமிர்தா என இருவரும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மற்றவர்களை அவர்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

பிரிட்டோ மைக்கேலின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. இன்னா மயிலு பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் இறுதியில் தான் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.

எடிட்டிங் :

படத்தை செம கிரிப்ஸியாக செய்துள்ளார் ஜி மதன். படம் ஒரு மணி நேரம் பத்து நிமிஷம் மட்டுமே ரன்னிங் டைம் கொண்டுள்ளது.

இயக்கம் :

வினித் வர பிரசாத் கவின் மற்றும் பூமி ஆகிய இருவர் மட்டுமே மையமாக வைத்து ஒரு லிப்டில் நடந்த தற்கொலையில் அதைச் சுற்றிலும் திரைக்கதையை அழகாக அமைத்துள்ளார்.

தம்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. கவின், அமிர்தா நடிப்பு

3. திரைக்கதை

4. படத்தின் ட்விஸ்ட்

தம்ப்ஸ் டவுன் :

1. லாஜிக்கல் தவறுகள்