Lift Movie Making Video
Lift Movie Making Video

செம ஸ்மார்ட்டான லுக்கில் கவின் நடித்துள்ள லிப்ட் படத்தின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Lift Movie Making Video : தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையாகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் கவின்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தார்.

மேலும் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமான இவர் தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

நான் சொன்னது எதையும் அஜித் கேட்கல.. அவருக்கு பதில் இவர் நடித்திருந்தால் ஜி படம் ஹிட் ஆகியிருக்கும் – தல ரசிகர்களை டென்ஷனாக்கிய இயக்குனரின் பேச்சு

நேற்று கவின் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியதால் லிப்ட் படக்குழு படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் படக்குழு சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் பலவற்றையும் வெளியிட்டுள்ளது.