திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் லைஃப் ஆஃப் பழம் பாடலின் முழு வீடியோ பாடல் வெளியானது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் தனுஷ். இவர் வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் குறித்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

அதாவது, தனுஷ் மற்றும் அனிருத் காம்போவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இடம்பெற்று இருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்தில் குறிப்பாக அனைவரையும் கவர்ந்திருந்த “லைப் ஆஃப் பழம்” பாடலின் வீடியோ இதுவரை வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது இப்பாடலில் முழு வீடியோவை சன்மியூசிக் நிறுவனம் தனது youtube சேனல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.