LIC Movie Issue : Shocking Update for Sivakarthikeyan Fans | Vignesh Shivan | Life is Colorfull | Sivakarthikeyan Movies | Kollywood Cinema news
மிஸ்டர் லோக்கல் படத்தின் தோல்வியால் சிவாவின் அடுத்த படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டு இருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

LIC Movie Issue : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு LIC என்றும் இதற்கு Love Is Colorful என்ற அர்த்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அதை முடித்த கையோடு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்த பிறகே விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

இது ஒரு பிரம்மாண்டமான படமாக தயாராக இருந்தது. ஆனால் தற்போது மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்ததால் இப்படத்தின் பட்ஜெட்டை கணிசமாக குறைக்க சொல்லி விக்னேஷ் சிவனிடம் லைக்கா நிறுவனம் கேட்டுள்ளார்களாம்.

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி அல்லது அலியா பட் இவர்களில் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.