லெட்ஸ் கேட் மேரிட் திரைப்படத்தில் இணைந்திருக்கும் புது கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அவர்கள் புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக தமிழில் “லெட்ஸ் கெட் மேரிட்” என்ற படம் உருவாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார். இதில் கதாநாயகனாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் கதாநாயகி இவானா நடிக்க இருக்கிறார்.

LGM திரைப்படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளர்!!… படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்.!

மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபுவும் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தில் இணைந்திருக்கும் புதிய கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல தொகுப்பாளர் மிர்ச்சி விஜய் இணைந்து இருப்பதாக படக்குழு போஸ்டருடன் அதிகாரிவபூர்வமாக அறிவித்துள்ளது.