Let's look at the six best ways to live a healthy life.
Let's look at the six best ways to live a healthy life.

1) குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம். சீரான ரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டிற்கு உதவும். ஒரே நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

2) பழங்கள், காய்கறிகள், முட்டை, மீன் ஆகியவற்றால் சமமாக உண்ணுங்கள். இவ்வாறு உண்பதன் மூலம் ஊட்டச்சத்து குறைவு போன்ற பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்.

3) வேலை சம்பந்தமான மன அழுத்தம், பணம் சம்பந்தமான பொறுப்புகள் மற்றும் வாழ்க்கை இன்னல்கள் ஆகியவை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கின்றன. எனவே அனைத்து சூழல்களிலும் மன அளவில் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

4) வாழ்க்கை முறை மாற்றங்கள், இயந்திரமயமாக்கல் போன்ற பொதுவான பிரச்சனைகள், உடலளவில் மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மை, இதய பிரச்சனைகள் போன்றவை உடல் பருமனுக்கு வழி வகுக்கின்றன.

எனவே விளையாட்டு நடனம், யோகா, நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுங்கள்.

5) சமூக வலைத்தளங்களை விட மனித உறவுகளின் மதிப்பு அதிகம். எனவே கைபேசி, கணினியுடன் நேரத்தை செலவிடுவதற்கு பதிலாக உறவுக்கு மரியாதை கொடுத்து உறவுகளுடன் நேரத்தை செலவிடுங்கள்.

6) வாழ்க்கையில் எல்லா சூழலிலும் எப்போதும் அனைவருக்கும் ஒரு இடைவெளி தேவை. எனவே ஒரு குறுகிய விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இத்தனை நாள் செய்த செயல்களை எண்ணி பாருங்கள்.

தவறு இருப்பின் திருத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்று சிறிது நேரம் செலவிடுங்கள். இதன் மூலம் உங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here