பிரபல படத்தின் காபி தான் லியோ டைட்டில் டீசர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று படத்தின் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியானது. செம மாஸாக வெளியானது டீசர் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் ஒன்றாக மாறி உள்ளது.

இருந்த போதிலும் நெட்டிசன்கள் சிலர் இந்த டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ஜெயிலர் படம் டைட்டில் டீசருடன் ஒன்றி போவதாக ஒப்பிட்டு வருகின்றனர். மேலும் மற்ற படங்களுடனும் ஒப்பிட்டு வருகின்றனர்.

https://twitter.com/champvirat_18/status/1621484717999792129?t=oM9tlvM75llykOPjOnfwLg&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.