லியோ படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கும் சஞ்சய் தத் குறித்து படக்குழு பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவருக்கான படப்பிடிப்புகளை நிறைவு செய்து இருப்பதாக புதிய தகவலை தற்போது படக்குழு பகிர்ந்துள்ளது.

அதில், நன்றி சஞ்சய் தத் சார், உங்களது நடிப்பை அருகில் பார்த்ததில் எங்களது படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது. வழக்கம்போல் அசத்தியுள்ளீர்கள். விரைவில் சென்னையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பு தளத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் சந்திப்போம் சார். என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.