லியோ படத்தில் இணைந்திருக்கும் பிரபல நடிகர் குறித்த ரகசியத்தை பிரபல youtuber இர்ஃபான் உடைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் youtube மூலம் பிரபலமான இர்ஃபானும் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் திடீரென்று இரவு நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவரும் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது இர்ஃபான் லியோ படக்குழுவினருடன் vlog வீடியோ எடுத்துள்ளார். அதன் மூலம் இப்படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் குறித்த ரகசியமான தகவல் உடைந்துள்ளது.

அதன்படி அந்த வீடியோவில் லியோ படக்குழுவினருடன் பரியேறும் பெருமாள், விக்ரம் வேதா, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கதிர் இருந்துள்ளார். இதனால் இப்படத்தில் கதிர் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் உறுதியாகி உள்ளது. படக்குழுவின் ரகசியத்தை உடைத்திருக்கும் இந்த வீடியோ தற்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது.