லியோ ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

தளபதி விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் கடும் குளிரில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரசிகர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.