காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய லியோ படக்குழுவினர் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் தளபதி விஜய். இவர் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு லியோ படக்குழு இருக்கும் இடத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ” We are safe namba” என அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கூறி ட்வீட் செய்துள்ளது. இந்த தகவலால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.