லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கோலிவுட் திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் பயங்கரமான எதிர்பார்ப்பை கிரியேட் செய்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் நிறைவு செய்திருந்ததாக படகுழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பாக 6 மாதங்களாக 125 நாட்களுக்கு நடைபெற்று வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் அவருடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.