பிரபல மலையாள நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தில் மகனாக நடித்து வரும் தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாபெரும் நட்சத்திரபட்டாலங்களை இணைந்து நடித்தவரும் இப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வருகிறது.

அந்த வகையில் மலையாள திரை உலகில் பிரபல நடிகராக திகழும் மேத்யூ தாமஸ் இப்படத்தில் விஜய்க்கு மகனாக நடித்து வருவதாகவும், இதற்காக அவர் கிளீன் ஷேவ் செய்து இளம் பையன் போல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் லியோ படத்தில் நடித்த அனுபவம் குறித்து மேத்யூ அளித்திருக்கும் பேட்டியின் தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், லோகேஷ் யூனிவர்சில் நடிப்பது அடி போலி அனுபவமாக உள்ளது. தமிழில் நடிப்பது எனக்கு வசதியாக இல்லை என்றாலும் என்னை இயக்குனர் லோகேஷ் அவர்கள் மிகவும் எளிமையாக வழிநடத்தி வருகிறார். இதில் தளபதியின் பெர்ஃபார்மன்ஸ் அடி போலியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் தனக்கு இயல் என்னும் தங்கை இருப்பதாகவும் தெரிவித்து மேலும் ஒரு புதிய தகவலை பகிர்ந்திருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.