லியோ படத்தில் இணைந்திருக்கும் பிரபல முன்னணி நடிகை குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதில் விஜயுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் நிலையில் இப்படத்தில் நடித்து வரும் மற்ற பிரபலங்கள் குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மேலும் ஒரு பிரபல நட்சத்திரம் இப்படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி யாரும் எதிர்பார்க்காத வகையில் இப்படத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமாகி ஜூங்கா, காதலும் கடந்து போகும், கவண், பா.பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மடோனா சபாஸ்டியன் இப்படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.