லியோ திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் தனது 67வது திரைப்படத்தை நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் சென்னையைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

அதாவது வரும் ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ கமலஹாசனின் பிறந்த நாளில் வெளியான நிலையில் அதேபோல் விஜய் பிறந்த நாளிலும் அவரது ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது.