லியோ திரைப்படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தற்போது பிரபல முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜோராக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதன்படி, காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு வரும் மார்ச் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு மீண்டும் சென்னைக்கு திரும்ப இருக்கும் படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் 30 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் லியோ திரைப்படத்தின் இறுதி பாகத்தை தயார் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.