லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வைரலாகி வருகிறது.

Leo movie latest shooting update viral:

கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவருக்கான படப்பிடிப்புகளை நிறைவு செய்ததை படக்குழு பதிவின் மூலம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட வெளியாகியுள்ளது.

அதன்படி லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் முடிவடையும் என்றும் அதன் பிறகு இரண்டு வார இடைவெளிக்கு பின் சென்னையில் இப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்து வைரலாகி வருகிறது.