லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் பட வில்லன் குறித்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.

கோலிவுட் திரையுலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக உருவாகி வருகிறது. அந்த வகையில் இதில் விஜயுடன் இணைந்து, த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு 60% நிறைவுற்றதை தொடர்ந்து மீதமுள்ள படப்பிடிப்பு தற்போது சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் புது புது தகவல்கள் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வரும் வகையில் யாரும் எதிர்பாராதவிதமாக டான்ஸர் ஜாஃபர் சாதிக்கும் லியோவில் இணைந்திருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி ஆச்சரியப்படுத்தி வருகிறது.

அதாவது லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கேங்கில் வில்லனாக நடித்து அனைவருக்கும் பரீட்சையமானவர் ஜாஃபர். இவர் இப்படத்தில் தனது கேரக்டரை சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது லியோ படத்திலும் ஜாஃபர் விஜய்யுடன் இணைந்து நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் உற்சாகத்தை கூட்டியதோடு இப்படம் லோகேஷின் LCUவில் கண்டிப்பாக வரும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.