லியோ படத்தின் வசூல் கண்டிப்பாக அடி வாங்கும் என பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வாரிசு.

இதைத்தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சீரியல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு விதிமுறைப்படி காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாகும் என்பதால் படத்தின் வசூல் நிச்சயம் அடி வாங்கும் என பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இந்த படம் 9 மணிக்கு வெளியானால் முதல் நாள் வசூல் 40 சதவீதம் அடி வாங்கும் என தெரிவித்துள்ளார். அதிகாலை காட்சிக்காக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்பட்ட நிலையில் அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.