Lemon Uses :
Lemon Uses :

Lemon Uses :

இனிமேல் தூக்கி எறியாதீர்கள்!!உங்களை அழகாக்கும் எலுமிச்சை பழத்தோல்:

எலுமிச்சை சாற்றில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன என்பது நாம் அறிந்ததே. ஆனால் எலுமிச்சை பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவற்றை அறிந்து கொள்வோம்.

● இரவு உறங்க செல்லும் முன் எலுமிச்சை பழத்தில் பாதியை முகத்தில் தடவிக் கொண்டு, காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக அழகுடன் இருக்கும்.

● எலுமிச்சை பழத்தோல் உடன் உப்பை சேர்த்து காயவைத்து அதை பவுடராக்கி பல்துலக்கினால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.

● குளிர்சாதன பெட்டியில் எலுமிச்சை தோல் வைத்தால் மணம்வீசும். அதனால் துர்நாற்றம் இருக்காது.

● எலுமிச்சை தோலை வெயிலில் உலர்த்தி நன்கு காய்ந்தவுடன் அதை பொடித்து அதனுடன் தேன், சர்க்கரை, ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பளபளப்பாகும்.

● எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளைத் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக அரிந்து, அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

● நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து பின் எலுமிச்சை தோலை நகங்களின் மீது தேய்த்து கழுவி விட வேண்டும். இதனால் நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறைந்து விடும்.

● எலுமிச்சை தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வர பற்களின் மஞ்சள் நிறம் நாளடைவில் மறைந்து விடும்.

● எலுமிச்சை தோலுடன் வெள்ளை வினிகர் கலந்து அதை நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் இரண்டு வாரம் வைத்து அதை கிரானைட் மற்றும் மார்பில் தவிர அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம்.

● வீட்டில் எறும்பு, கரப்பான் தொல்லை இருந்தால் உடனே எலுமிச்சை தோலை அறிந்து வைத்தால் போதும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here